மாநில அளவிலான பூப்பந்து போட்டி

மாநில அளவிலான பூப்பந்து போட்டி நடந்தது.
மாநில அளவிலான பூப்பந்து போட்டி
Published on

9-வது மாநில அளவிலான ஐவர் பூப்பந்து போட்டி திருச்சி, பொன்மலைப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடக்கும் இந்த போட்டியை மனோ பூப்பந்தாட்ட கிளப் நடத்துகிறது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 16 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த முக்கியமான போட்டிகளில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி 35-29, 35-23 என்ற செட் கணக்கில் லயோலா கல்லூரி அணியையும், எண்ணூர் பூப்பந்து கிளப் 28-35, 35-32, 35-28 என்ற செட் கணக்கில் ஸ்ரீரங்கம் அணியையும் தோற்கடித்து அரையிறுதி லீக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றன. மேலும் தெற்கு ரெயில்வே இன்ஸ்டியூட், பொன்மலை, திண்டுக்கல் ஏ.ஆர்.மருத்துவமனை அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. முன்னதாக காலையில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், பள்ளி தாளாளர் பிரான்சிஸ் சேவியர், தேசிய கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, ஜமால்முகமது கல்லூரி பேராசிரியர் குணசீலன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது மற்றும் கடைசி நாள் போட்டிகள் நடக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com