தமிழ்நாட்டின் 2-வது பொருளாதார அறிக்கை இன்று வெளியாகிறது

நாளை தொடங்​கும் சட்​டசபை கூட்​டம் 20-ம் தேதி வரை நடை​பெற வாய்ப்புள்​ளது.
தமிழ்நாட்டின் 2-வது பொருளாதார அறிக்கை இன்று வெளியாகிறது
Published on

சென்னை,

தமிழக சட்​டசபை​யின் இந்த ஆண்டு முதல் கூட்​டம் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்​கியது. கவர்னர் ஆர்​.என்​.ர​வி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் பேர​வையை விட்டு வெளி​யேறி​னார். தொடர்ந்து கவர்னர் உரை​யின் தமிழாக்​கத்தை பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு வாசித்​தார். உரையை கவர்னர் வாசித்ததாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்​னர், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் 22-ம் தேதி தொடங்கியது. முதல்​-அமைச்சர் மு.க.ஸ்​டா​லின் 24-ம் தேதி பதில் அளித்​தார். இதையடுத்​து, மறுதேதி குறிப்​பி​டா​மல் பேரவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

இதனை தொடர்ந்து 2026-27-ம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதி அமைச்​சர் தங்​கம் தென்​னரசு நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்​கல் செய்​கிறார். சட்​டசபை தேர்​தல் வரவுள்​ள​தால், இந்த இடைக்​கால பட்​ஜெட்​டில் வழக்​க​மான நிதி ஒதுக்​கீடு​கள் மட்​டுமின்​றி, மக்​களைக் கவரும் பல முக்​கிய அறி​விப்​பு​களும் இடம்​பெற வாய்ப்​புள்​ளதாக கூறப்பட்டுகிறது.

20-ம் தேதி 2026-27-ம் ஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26-ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல் செய்​யப்​படு​கின்​றன. நாளை தொடங்​கும் சட்​டசபை கூட்​டம் 20-ம் தேதி வரை நடை​பெற வாய்ப்​புள்​ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று மாநிலத்தின் 2வது பொருளாதார அறிக்கை வெளியாக உள்ளது. 2025-ல் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.2% வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், பொருளாதார வளர்ச்சி, விவசாயம், தொழில் துறை, வேலைவாய்ப்பில் கடந்தாண்டு தமிழ்நாட்டின் வலுவான சாதனைகளை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com