அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிப்பு: உரிய நடவடிக்கை தேவை - மு.க.ஸ்டாலின்


அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிப்பு: உரிய நடவடிக்கை தேவை - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 28 Aug 2025 11:10 AM IST (Updated: 28 Aug 2025 12:49 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணம், சீர்திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஜவுளித்துறை பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு மாற்று வழிகளை தேடி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 50 சதவீதமாக உயர்த்தியது தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். நமது தொழில்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணம் வழங்குவதுடன், கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story