

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (15-ந் தேதி) உருவாகக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை மிதமான பனிமூட்டம் காணப் படும்.
அதே போல, 16-ந் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்பு ரம், கடலூர், புதுச்சேரியிலும், 17-ந் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல் பட்டு, விழுப்புரத்திலும், 18-ந் தேதி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் அதிகாலையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். மேலும், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசும் இருக்கக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற் றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (14-ந் தேதி) மற்றும் நாளை அதிக பட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.