சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது

சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது.
சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது
Published on

சென்னை,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

இந்த கூட்டத்தின் முதல் நாளில் மரபுப்படி கவர்னர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதன்படி, உரை நிகழ்த்துவதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்தார். அவரை சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டசபை கூட்ட அரங்கத்துக்கு அழைத்து சென்றனர்.

அதன்பின் தொடங்கிய கவர்னரின் ஆங்கில உரை காலை 10.53 மணி வரை நீடித்தது. கவர்னர் பேசி முடித்ததும், அவரது உரையை சபாநாயகர் ப.தனபால் தமிழில் வாசித்தார். காலை 10.55 மணிக்கு படிக்க தொடங்கிய அவர் 11.49 மணிக்கு வாசித்து முடித்தார். அதனை தொடர்ந்து, நாட்டுப்பண் ஒலிபரப்பப்பட்டது. அத்துடன் நேற்றைய கூட்டம் நிறைவு பெற்றது.

இதனிடையே பேச வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் 10.04 மணிக்கு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களும் வெளியேறினார்கள்.

இந்த நிலையில், சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது.

இதில், பரிதி இளம்வழுதி உள்பட 12 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com