தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது - சசிகலா பேச்சு

தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது என்று சசிகலா தெரிவித்தார்.
தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது - சசிகலா பேச்சு
Published on

திண்டிவனம்,

சசிகலா தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்தார்.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் சசிகலா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அதன்பின்னர் பொதுமக்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:-

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை 3-வது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசு தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது. தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது. அதிமுகவில் நடப்பதை பார்த்து திமுகவினர் ஆனந்தமாக உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் அதிகாரம் கொடுத்தது?. அதிமுக சட்டவிதிகளை மாற்ற யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது? என்று சசிகலா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com