மத்திய ரெயில்வே பட்ஜெட், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய அத்தியாயம் - எல்.முருகன்

தமிழ்நாட்டின் ரெயில் உள்கட்டமைப்பு பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய ரெயில்வே பட்ஜெட், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய அத்தியாயம் - எல்.முருகன்
Published on

சென்னை,

பாஜக மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய ரெயில்வே பட்ஜெட், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய அத்தியாயமாக அமைகிறது.

1. மொத்தம் ரூ. 7,611 கோடி ஒதுக்கீடு - இது முந்தைய காங்கிரஸ் - UPA ஆட்சி காலத்தை விட 9 மடங்கு அதிகமாகும்.

2. ரூ. 35,700 கோடி மதிப்பிலான இரயில் திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

3. தலைநகர் சென்னையை, ஐதராபாத் மற்றும் பெங்களூருவுடன் இணைக்கும் இரண்டு அதிவேக (புல்லட்) ரெயில் பாதை திட்டங்கள்.

4. பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், தமிழகத்தில் 77 அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும், மதிப்பிற்குரிய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் வழிகாட்டுதலிலும், தமிழ்நாட்டின் ரெயில் உள்கட்டமைப்பு பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளது.

இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை வழங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும், தமிழக மக்கள் சார்பாக என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com