திருப்பத்தூர்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு - 2 இளைஞர்கள் கைது


திருப்பத்தூர்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு - 2 இளைஞர்கள் கைது
x

பெண் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பியோடினர்.

திருப்பத்தூர்,

சென்னையை சேர்ந்த அஞ்சலை என்பவர் நேற்று ரெயிலில் திருப்பூர் சென்றார். அப்போது 2 வாலிபர்கள் அஞ்சலை கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பியோடினர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அஞ்சலை, உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜோலார்பேட்டை போலீசார், ரெயில் நிலையத்தில் தப்பி ஓடிய நபர்கள் குறித்து சி.சி.டி.வி உதவியுடன் தேடினர். இதில் மாரியப்பன், கார்த்திக் ஆகிய இருவரும் அஞ்சலையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story