திருச்சியில் விஜய் பரப்புரையை தொடங்கும் இடம் இது தான்....


திருச்சியில் விஜய் பரப்புரையை தொடங்கும் இடம் இது தான்....
x
தினத்தந்தி 6 Sept 2025 11:16 AM IST (Updated: 6 Sept 2025 11:45 AM IST)
t-max-icont-min-icon

விஜய்யின் சுற்றுப்பயணத்துக்காக சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த சூழலில் 2-வது மாநில மாநாடு நேற்று மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வரும் 13 ஆம் தேதியில் இருந்து விஜய் பிரசாரத்தை தொடங்க உள்ளார் . திருச்சியில் இருந்து விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். இந்த தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்துக்கு ‘மக்களுடன் சந்திப்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதல் கட்ட சுற்றுப்பயணம் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் போது 10 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் விஜய் ஆதரவு திரட்ட உள்ளார். இந்த 10 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் முக்கிய நகரங்களில் விஜய் ரோடு ஷோ நடத்த உள்ளார். மேலும், முக்கிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி விஜய் பேசவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.விஜய்யின் சுற்றுப்பயணத்துக்காக சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொகுசு பஸ்சை அதிநவீன வசதிகளுடன் மாற்றி அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் இருந்து தனது பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது திருச்சியில் 2 இடங்களில் பரப்புரை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீரங்கத்துடன் சேர்த்து மற்றொரு இடத்தையும் உறுதி செய்த பின் காவல்துறையிடம் அனுமதி பெற்று பரப்புரை செய்யத் திட்டம் என கூறப்படுகிறது.

1 More update

Next Story