இதுவே சரியான தருணம்: மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள்- பா.ம.க. தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

கடந்த காலங்களில் நாம் போராடித்தான் உரிமைகளைப் பெற்றோம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுவே சரியான தருணம்: மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள்- பா.ம.க. தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
Published on

சென்னை,

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது;-

என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…?

நான் பொது வாழ்விற்கு வந்த போது கிராமத்திற்கு 25 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன் என்று அன்றே சொன்னேன். ஆனால் மக்களின் வாழ்கைத் தரம் உயரவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவ சமூகம் உருவாக்க சமூக நீதி பற்றிய தெளிவில்லாத ஆட்சியாளர்கள் போதைக்கும், இலவசத்திற்கும் மக்களை அடிமைப்படுத்திவிட்டனர். தமிழகத்தில் தற்போது நாள்தோறும் பல்வேறு துறையினர் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அதனைக் காதுகொடுத்து கேட்கக்கூட நாதியில்லை. ஆனால் வாக்குக்கு இப்போதே மறைமுகமாக பணம் கொடுக்கவும், செய்த ஊழலில் உங்களையும் உட்படுத்தவும் முயற்சிக்கின்றனர். எனவே இதுவே சரியான தருணம். மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள். நாம் ஒருங்கிணைந்து போராடுவோம். கடந்த காலங்களில் நாம் போராடித்தான் உரிமைகளைப் பெற்றோம். இங்கு போராடாமல் எதுவும் கிடைக்காது.

வரும் தேர்தலில் அரசியல் அதிகாரம் பெற்று சாதிவாரிக் கணக்கெடுத்து அனைத்து சாதியினருக்கும் விகிதாச்சார இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் கிடைக்க ஆவன செய்வோம். மனித வளத்தை மேம்படுத்த, சமூக ஒற்றுமையை வளர்க்க, ஊழலையும், துரோகத்தையும் துடைத்தெரிய சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம். நம்மை நாமே தூற்றிக்கொள்வது நம்மை மயக்கம் தெளியாமல் பார்த்துக்கொள்வோருக்கு ஆதாயம் கிடைக்க வழிவகுக்கும். புரிந்துகொண்டு என்னுடன் தொடர்ந்து பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து உங்களோடு பேசுவேன்.

அன்புடன் உங்கள்

மருத்துவர் ராமதாஸ்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com