திருப்பூர்: மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி


திருப்பூர்: மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
x
தினத்தந்தி 20 May 2025 11:47 AM IST (Updated: 20 May 2025 1:03 PM IST)
t-max-icont-min-icon

கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

திருப்பூர்,

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ராஜா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில், இன்று காரில் ஈரோடு வந்துகொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த ராஜா, அவரது மனைவி, மூத்த மகள் ஹேமிமித்ரா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 வயது சிறுமி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story