மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

அருவில் தற்போது தண்ணீர் வரத்து சீராக உள்ளது.
திருநெல்வேலி
மேற்குத்தொடர்ச்சி மழைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அருவில் தற்போது தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் இன்று முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வரும் பொதுமக்கள் இன்றுமுதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் மணிமுத்தாறு அருவியில் குளித்து பொதுமக்கள் மகிழ்கின்றனர்.
Related Tags :
Next Story






