

எட்டயபுரம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 40), லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து தனியாக சென்றுவிட்டார். எனவே குருசாமி தனது குழந்தைகளுடன் தற்போது குளத்தூர் சுந்தரலிங் கம் நகரில் வசித்து வந்தார். குழந்தைகளை பராமரிப்பதற்காக ஒரு பெண்ணையும் வேலைக்கு அமர்த்தி இருந்தார்.
குருசாமி நேற்று தனது சகோதரர் முனியசாமியின் மகன்களான முகிலர சன் (5), சுமித்ரன் (3), சகோதரி முத்துலட்சுமி (48) மற்றும் வேலைக்கார பெண் ஆகியோரை ஒரே மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு விளாத் திகுளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். மாலையில் 5 பேரும் மீண்டும் குளத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் விளாத்திகுளம் அடுத்த வைப்பார் அருகே சென்றபோது, எதிர் திசையில் சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சுற்றுலா வேன் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வேன் திடீரென குருசாமி ஓட்டி வந்த மோட் டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் குரு சாமி, முகிலரசன், சுமித்ரன், முத்துலட்சுமி, வேலைக்கார பெண் என 5 பேரும் சாலையில் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த 5 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரி தாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வேன் டிரைவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.