வன்னியர் இடஒதுக்கீடு; விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை மக்கள்திரள் போராட்டம்


வன்னியர் இடஒதுக்கீடு; விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை மக்கள்திரள் போராட்டம்
x

கோப்புப்படம்

வன்னியர் இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1200 நாள்களுக்கு மேலாகியும் இன்று வரை இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தி.மு.க அரசைக் கண்டித்தும், உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை காலை 11.00 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் மாபெரும் மக்கள்திரஸ் போராட்டம் நடைபெறவுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றவிருக்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story