விஜயின் பாதுகாப்பில் குறைபாடா? அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் உள்துறை அமைச்சகம்


விஜயின் பாதுகாப்பில் குறைபாடா? அதிகாரிகளிடம்  விளக்கம் கேட்கும் உள்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 2 Oct 2025 11:42 AM IST (Updated: 2 Oct 2025 12:27 PM IST)
t-max-icont-min-icon

விஜயின் பாதுகாவலர்கள் எண்ணிக்கை விரைவில் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு 'ஒய்', 'இசட்' எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்குகிறது.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் த.வெ.க. தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது.

இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், விஜயின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.கரூர் பிரசார கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? என அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.பாதுகாப்பு அதிகாரிகள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story