அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு


அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
x

செம்பரம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகத்தை முதல்-அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கத்தில் 66 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்! செம்பரம்பாக்கத்தில் இருந்து, சென்னை மாநகருக்கு நாளொன்றுக்குக் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தேன்!

இதனால், சென்னையின் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சியின் குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 இலட்சம் பொதுமக்கள் பயன்பெறப் போகின்றனர்... இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story