திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை - மு.க.ஸ்டாலின்

தமிழினத்துக்கு எத்தனை தடைகள்?... மத்திய அரசை திருத்துவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

கீழடி அகழாய்வு முடிவுகள் தொடர்பாக மத்திய பாஜக அரசை கண்டித்து, திமுக மாணவரணி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை. நாளை மதுரை வீரகனூரில், திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com