10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த மாவட்டத்தில் அதிக தேர்ச்சி?

வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளனர்.
சென்னை,,
கடந்த மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. மொத்தம் 93.80 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவிகள் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்; மாணவர்கள் 4,00,078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
இந்தநிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த மாவட்டத்தில் அதிக தேர்ச்சி என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
சிவகங்கை - 98.31
திருநெல்வேலி 94.16
விருதுநகர் 97.45
மதுரை 93.93
தூத்துக்குடி 96.76
மயிலாடுதுறை 93.90
கன்னியாகுமரி 96.66
ராமநாதபுரம் 93.75
திருச்சி 96.61
புதுக்கோட்டை 93.53
கோவை 96.47
திண்டுக்கல் 93.28
பெரம்பலூர் 96.46
அரியலூர் 96.38
திருவண்ணாமலை 93.10
தர்மபுரி 96.31
திருப்பத்தூர்(வி) 92.86
கரூர் 96.24
சேலம் 92.17
ஈரோடு 96.00
நாகப்பட்டினம் 91.94
தஞ்சாவூர் 95.57
தேனி 91.58
திருவாரூர் 95.27
ராணிப்பேட்டை 91.30
தென்காசி 95.26
சென்னை 90.73
விழுப்புரம் 95.09
செங்கல்பட்டு 89.82
காஞ்சிபுரம் 94.85
திருவள்ளூர் 89.60
திருப்பூர் 94.84
கள்ளக்குறிச்சி 86.91
கிருஷ்ணகிரி 94.64
நாமக்கல் 94.52
காரைக்கால் 93.60
கடலூர் 94.51
புதுச்சேரி 97.37
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






