மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
Published on

அவினாசி

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சித்தானந்த நாயக் (வயது 26). இவர் மங்கலம் ரோட்டில் சலீம் என்பவர் கட்டிவரும் வீட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த கட்டிடத்தில் பக்கவாட்டில் மின்சார கம்பி செல்கிறது. இந்த நிலையில் கீழே கிடந்த கம்பியை சித்தானந்த நாயக் எடுத்துள்ளார். அப்போது அந்தகம்பி மின்சார கம்பியில் பட்டு அவர் மீது மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். உடனடியாக சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

---------

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com