மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

சங்கரன்கோவிலில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பாரதியார் 8-ம் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் பாலாஜி (வயது 34). கூலித்தொழிலாளி. மேலும் இவர் வீட்டில் தொழுவம் அமைத்து, மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மாட்டு தொழுவத்தில் உள்ள மின்சார மோட்டாரை இயக்க முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்து பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார், பாலாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி இறந்த பாலாஜிக்கு மல்லிகா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com