பெண்ணிடம் தங்க செயின் பறிக்க முயன்ற வாலிபர் காயம்: போலீஸ் விசாரணை

தச்சநல்லூர் பகுதியில், மேலக்கரை நியூ காலனியை சேர்ந்த ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த வாலிபர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க செயினை பறிக்க முயன்றார்.
பெண்ணிடம் தங்க செயின் பறிக்க முயன்ற வாலிபர் காயம்: போலீஸ் விசாரணை
Published on

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் தச்சநல்லூர், மேலக்கரை நியூ காலனியை சேர்ந்த மாரியப்பன் மனைவி சாந்தி (வயது 55) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாறைபட்டியை சேர்ந்த சக்திவேல் மகன் ரமேஷ்(24) மற்றும் ஒருவர் சேர்ந்து சாந்தியின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முற்பட்டபோது சாந்தி சத்தம் போட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்து அந்த நபர்கள் தப்பிக்க முயன்றபோது எதிரில் வந்த வாகனத்தில் மோதி கீழே விழுந்தனர். அதில் ரமேஷிற்கு காயம் ஏற்பட்டதால், அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி சாந்தி கொடுத்த புகாரின்பேரில் தச்சநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com