கூடலூர்: புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவிடவில்லை - வனத்துறை

கூடலூ பகுதியில் 4 பேரை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Published on

கூடலூர்.

கடந்த ஏழு நாட்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் வனத்துறையினருக்குப் போக்குகாட்டி வரும் டி23 புலி இதுவரை நான்கு பேரைக் கொன்றுள்ளது.

தற்போது எஸ்டேட்டை அச்சுறுத்தி வரும் புலிக்கு வயது 13. மேலும் உடலில் காயங்களோடு இந்த புலி சுற்றி வருவதால் ஆட்கொல்லி புலியாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது. மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வண்டலூர் பூங்காவிற்குக் கொண்டுசென்று பராமரிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த வனத்துறையின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் கூடலூர் பகுதியில் 4 பேரை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளித்த வனத்துறையினர், புலியை சுட்டுப்பிடிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தேடுதல், பொறி வைத்துப் பிடித்தல், அமைதிப்படுத்தல் நடவடிக்கைகள் பலன் தராத நிலையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போதைய சூழலில் புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றும் வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com