ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

சுருக்கமாக கேள்வி கேட்கவும், சுருக்கமாக பதில் அளிக்கவும் உறுப்பினர்கள் மற்றும் மந்திரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடரின் 2-வது நாளான நேற்று மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக கேள்வி நேரம் நடைபெற்றது. பொதுவாக கேள்வி நேரத்தின்போது கேள்வியும், துணைக்கேள்விகளும் நீளும். அதைப்போல பதில்களும் தேவைக்கேற்ப நீண்டுகொண்டே செல்லும். இவ்வாறு ஒரு கேள்விக்கு நீண்ட நேரம் எடுப்பதை குறைக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா அடிக்கடி கூறி வந்தார்.

இந்த நிலையில் நேற்றும் இதனை முன்வைத்தார். சுருக்கமாக கேள்வி கேட்கவும், சுருக்கமாக பதில் அளிக்கவும் உறுப்பினர்கள் மற்றும் மந்திரிகளை அவர் கேட்டுக்கொண்டார். இதில் தீவிரம் காட்டிய அவரது நடவடிக்கையால் நேற்று 17 கேள்விகளுக்கு (நட்சத்திர குறியிட்டவை) அவையில் பதில் தெரிவிக்கப்பட்டது. இது வழக்கத்தைவிட அதிகம் ஆகும்.

இதைப்போல அவையில் யாரும் தேவையில்லாமல் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது என்றும் கூறிய ஓம்.பிர்லா, இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபாலை கண்டித்தார். தேவையென்றால் வெளியே சென்று பேசிவிட்டு வருமாறும் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com