

நகரி,
ஆந்திராவில் ஒரு தம்பதி ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பிரம்மசமுத்திரம் நஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கவிதா கர்ப்பமுற்றார்.
அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இதில் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் அடங்கும். 3 குழந்தைகளும் நலமாக உள்ளன.