கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

மாவட்டத்தில் பொது கலந்தாய்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்
Published on

காரியாபட்டி,

பொது கலந்தாய்வு மூலம் மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி சோழபுரம் 2-வது பகுதியில் பணியாற்றிய சுமதி ராஜபாளையத்துக்கும், அப்பனேரியில் பணியாற்றிய மணிகண்டன் புதுப்பாளையத்துக்கும், அயன்கொல்லங்கொண்டானில் பணியாற்றிய கண்ணன் சம்மந்தபுரத்துக்கும், ஜமீன்நத்தப்பட்டியில் பணிபுரிந்த சீனிவாசன் செட்டியார்பட்டிக்கும், கொத்தன்குளத்தில் பணியாற்றிய கணேசன் சேத்தூர் மெயினுக்கும், மேலப்பாட்டம் கரிசல்குளத்தில் பணியாற்றும் விஷ்ணுவர்த்தன் சேத்தூர் கூடுதல் பகுதிக்கும், வடக்கு வெங்காநல்லூர் (கூடுதல்) பகுதியில் பணியாற்றும் மேனகா மேட்டுப்பட்டிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சமுசிகாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் மேலப்பாட்டம் கரிசல்குளத்துக்கும், மேலராஜகுலராமனில் பணியாற்றிய ஆனந்தம் சோழபுரம் 2- வது பகுதிக்கும், வடக்கு வெங்காநல்லூர்(மெயின்) கிராமநிர்வாக அலுவலர் மணிகண்டன் திருச்சலூருக்கும், அரசியார்பட்டியில் பணியாற்றிய பிரேமா அப்பனேரிக்கும், திருச்சலூரில் பணியாற்றும் ராதா வடக்கு வெங்காநல்லூர்(கூடுதல்) பகுதிக்கும், ராஜபாளையத்தில் பணியாற்றிய ஜனகன்ராஜா சமுசிகாபுரத்திற்கும், புதுப்பாளையத்தில் பணியாற்றிய ராமராஜ் அயன்கொல்லங்கொண்டான் 1-வது பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

செட்டியார்பட்டியில் பணியாற்றிய பழனிமுருகன் கொத்தன்குளத்துக்கும், சம்மந்தபுரத்தில் பணியாற்றிய வேலுச்சாமி மேலராஜகுலராமனுக்கும், சேத்தூர் கூடுதல் பகுதியில் பணியாற்றிய விஜயா ஜமீன்நத்தம்பட்டிக்கும் சேத்தூரில் பணியாற்றிய மாரிமுத்து அரசியார்பட்டிக்கும் மேட்டுப்பட்டியில் பணிபுரிந்த முத்துலட்சுமி வடக்கு வெங்காநல்லூர் மெயின் பகுதிக்கும் மாறுதல் ஆகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com