

சென்னை,
தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி வடகிழக்கு பருவமழை விலகியது. அதன் பின்னர், பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் அடித்து வருகிறது. இதற்கிடையே, அதிகாலை வேளையில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில், வரும் 14-ந்தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசானது முதல் மித மான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13-ந்தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களி லும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் பனிப்பொழிவு தொடர்ந்து வரும் நிலையில், பிப்ரவரி 20-ம் தேதியையொட்டி தெற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். 20-ம் தேதி முதல் பனிப்பொழிவு குறைந்து மழை வானிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.