வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தெற்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
Published on

சென்னை,

வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், தெற்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் (நாளை) 15ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்” என்று தெரிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com