48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
Published on

சென்னை,

பூமத்தியரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்குபகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். 20, 21-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 20-ந்தேதி வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும்.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங் கல்பட்டு மாவட்டங்களில் நாளை அதிகாலை லேசான பனிமூட்டம் இருக் கும். தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com