மதியம் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதியம் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர் , செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com