மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து இன்று (வியாழக்கிழமை) விலகுகிறது என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா-மாஹி, தெற்கு உள் கர்நாடகம், ராயல்சீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதவிர கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மற்றும் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு அகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






