தொடர் நாடகத்தில் வில்லன் மீதான ஆத்திரத்தில் டி.வி.யை அடித்து உடைத்த மூதாட்டி

டாலியன் நகரை சேர்ந்த 91 வயது மூதாட்டி டி.வி. தொடர் நாடகங்களை விடாமல் பார்ப்பது வழக்கம்.
தொடர் நாடகத்தில் வில்லன் மீதான ஆத்திரத்தில் டி.வி.யை அடித்து உடைத்த மூதாட்டி
Published on

பீஜிங்,

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களைப் பார்ப்பவர்கள் பெரும்பாலானோர் அதற்கு அடிமை யாகி விடுகிறார்கள். தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்கள் அழும்போது அழுபவர்களும், சிரிக்கும்போது சிரிப்பவர்களும் பலர் உள்ளனர்.

தங்களுக்குப் கதாபாத்திரங்கள் அநீதியை சந்திப்பதைப் பிடித்த பார்த்து கட்டுப்பாட்டை இழக்கும் மக்களும் பலர் இன்றும் கிராமத்தில் உள்ளனர். அவ்வாறு தொடர் நாடகத்தை பார்த்த மூதாட்டி ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து டி.வி.யை அடித்து நொறுக்கிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவின் லியோனிங் மாகாணம் டாலியன் நகரை சேர்ந்த 91 வயது மூதாட்டி டி.வி. தொடர் நாடகங்களை விடாமல் பார்ப்பது வழக்கம். இதில் ஒரு நாடகத்தில், வில்லன் கதாநாயகியை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த காட்சி இடம்பெற்றது. இதனால் கோபமடைந்த மூதாட்டி, வில்லனை சபித்து டி.வி. திரையில் ஒரு குத்து விட்டார். அதனால் டி.வி. 2 ஆக உடைந்தது.

ஆத்திரம் தீராமல் “அவன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? நாம் போலீசை அழைத்து அவனை தண்டிக்க வேண்டும்," என்று அவர் ஆக்ரோஷத்து டன் கூறுகிறார். ஏற்கனவே இதுபோல் வில்லன்களைத் தள்ளிவிட்டதாக எண்ணி ஒரு டிவியை முற்றிலுமாக உடைத்துவிட்டார்.

அதன்பிறகு வேறு டி.வி. வாங்கினர். ஆனால் மூன்றே நாட்களில், பாட்டி குத்து விட்டதில் இந்த டி.வி.யும் உடைந்துவிட்டதாக பேத்தி லியு கூறினார். இதையடுத்து வேறு டி.வி. வாங்கி உள்ளனர். இந்த முறை டி.வி. திரையின் முன் ஒரு பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com