

* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள பெண் செனட்சபை உறுப்பினர் எலிசபெத் வாரன், தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் பேஸ்புக், கூகுள், அமேசான் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பேன் என தெரிவித்துள்ளார்.
* மியான்மரின் ராஹினே மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 9 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
* பிஜி நாட்டின் லம்பாசா நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.
* பாகிஸ்தானின் கில்கிட்பல்ட்சிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள நங்கா பார்பட் மலையின் மீது ஏறியபோது, கடந்த மாதம் 24ந் தேதி மாயமான இங்கிலாந்து மற்றும் இத்தாலியை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 2 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.
* சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் மாண்பிஜ் நகரில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறியதில் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.