உலகைச்சுற்றி...

ஹாலிவுட் நட்சத்திர ஜோடி ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் பிரிந்து விட்டனர்.
உலகைச்சுற்றி...
Published on

* இந்தோனேசியாவில் பாண்டா அச்சே நகரின் லாம்பரோ சிறையில் நடந்த மோதலின்போது தப்பி ஓடிய கைதிகளில் 36 பேரை போலீசார் கைது செய்து விட்டனர். இன்னும் 77 கைதிகளை தேடி வருகிறார்கள்.

* கம்போடியாவில் ஆங்கோர் தொல்பொருள் பூங்காவை பார்வையிட மக்கள் கூட்டம் அலை மோதுகிறதாம். 11 மாதங்களில் இங்கு பார்வையாளர்கள் கட்டணமாக 104 மில்லியன் அமெரிக்க டாலர் (ஒரு டாலரின் மதிப்பு சுமார் ரூ.70) வசூலாகி உள்ளது.

* ஹாலிவுட் நட்சத்திர ஜோடி ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் பிரிந்து விட்டனர். இந்த ஜோடியினர் பெற்ற குழந்தைகள் 3. தத்தெடுத்த குழந்தைகள் 3. இந்த குழந்தைகளை யார் பாதுகாத்து வளர்ப்பது என்பதில் அவர்களுக்குள் இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஏஞ்சலினா ஜோலி தெரிவித்துள்ளார். ஆனால் இதுபற்றிய கூடுதல் தகவலை அவர் வெளியிடவில்லை.

* அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும், சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி அதெல் அல் ஜூபைரும் வாஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஏமன் சமரச பேச்சுவார்த்தை, சவுதி பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

* கம்போடியாவில் 11 மாதங்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 14 ஆயிரத்து 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com