நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த தாமிர சுரங்கம் - ஒருவர் பலி, 5 பேரை தேடும் பணி தீவிரம்


நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த தாமிர சுரங்கம் - ஒருவர் பலி, 5 பேரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 2 Aug 2025 11:35 AM IST (Updated: 3 Aug 2025 11:43 AM IST)
t-max-icont-min-icon

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி

சாண்டியாகோ,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் அன்டஸ் மலைத்தொடரில் எல் டெனிண்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான தாமிர சுரங்கம் உள்ளது. உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கங்களில் இதுவும் ஒன்றாகும். இதனிடையே, தாமிர சுரங்கத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் தொழிலாளர்கள் 15 பேர் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் தாமிர சுரங்கம் இடிந்து விழுந்தது.

இதில், சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் , சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஒரு தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். ஆனாலும், இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story