சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரானா...!

கடந்த 24 மணி நேரத்தில் தென் கொரியாவில் புதிதாக 4,00,000 க்கும் மேற்பட்ட கொரானா தொற்று பாதிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

சியோல்,

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது.

இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக கடந்த 6 நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,00,000 க்கும் மேற்பட்ட கொரானா தொற்று பாதிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென் கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் கூறுகையில், ஒரே நாளில் 4,00,741 புதிய கொரானா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு ஜனவரியில் நாடு தனது முதல் கொரானா வழக்கைப் பதிவு செய்ததிலிருந்து மிக அதிகம். இதன் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது தற்போது 7,629,275 ஆக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளது.

இந்த வழக்குகளில் பெரும்பாலானவை உள்நாட்டில் பரவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மட்டும் தென் கொரியாவில் 24 மணி நேரத்தில் 293 இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com