கிரீஸ்: அகதிகள் படகு, மற்றொரு படகு மீது மோதி 14 பேர் பலி

விபத்தில் சிக்கியவர்களில் 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கிரீஸ்:  அகதிகள் படகு, மற்றொரு படகு மீது மோதி 14 பேர் பலி
Published on

சியோஸ்,

கிரீஸ் நாட்டின் கடலோர காவல் படையின் படகு ஒன்று சியோஸ் தீவு அருகே ஏஜியன் கடலில் சென்று கொண்டிருந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அகதிகள் சிலரை ஏற்றி கொண்டு சென்ற படகு அதன் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில், 14 பேர் நீரில் மூழ்கி பலியாகி விட்டனர். 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 7 குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணி ஆகியோர் காயமடைந்தவர்களில் அடங்குவர்.

Also Read
ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு; 30 பேர் பலி
கிரீஸ்:  அகதிகள் படகு, மற்றொரு படகு மீது மோதி 14 பேர் பலி

அவர்களில் 2 கடலோர காவல் படை அதிகாரிகளும் அடங்குவர். படகில் எத்தனை பேர் இருந்தனர் என்ற விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக படகுகளும், ஒரு ஹெலிகாப்டரும் மற்றும் நீச்சல் வீரர்களும் சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com