

பெய்ரூட்,
சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிரியாவில் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் செயல்படுகின்றனர்.
சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரும் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், ஈராக் எல்லையை ஒட்டிய சிரியா நாட்டின் கிழக்கே அமைந்த ஹாஜின் நகரில் சிரிய ஜனநாயக படையினரை இலக்காக கொண்டு ஐ.எஸ். அமைப்பினர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அமெரிக்க ஆதரவு படையினர் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.