மீண்டும் ஒரு கொடூரம்...! கட்டிவைத்து கல்லால் அடித்து கொல்லப்பட்ட அப்பாவி...!

மீண்டும் ஒரு கொடூரம்...! கட்டிவைத்து கல்லால் அடித்து கொல்லப்பட்ட அப்பாவி...!
மீண்டும் ஒரு கொடூரம்...! கட்டிவைத்து கல்லால் அடித்து கொல்லப்பட்ட அப்பாவி...!
Published on

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது ஜங்கல் டேரா கிராமம். இங்கு வசித்து வந்தவர் முஸ்டாக் அகமது( வயது 41). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். குரான் நூலின் பக்கங்களை கிழித்து, தீ வைத்து இவர் எரித்து விட்டதாக கூறி, அந்த பகுதியில் உள்ள மக்கள் கும்பலாக ஒன்று சேர்ந்து அகமதுவை தரதரவென இழுத்து சென்று மரத்தில் கட்டி வைத்து உள்ளனர். பின்னர் மொத்த பேரும் கல்லாலேயே அவரை தாக்கி உள்ளனர்.

முஸ்டாக் அகமது நான் குரானை எரிக்கவே இல்லை. நான் நிரபராதி என்று கதறி அழுது உள்லார். ஆனால் யாருமே அவர் பேச்சை கேட்கவில்லை. இதில் அகமது அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரை படுகொலை செய்ததோடு, அவரின் சடலத்தையும் மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

அந்த கும்பல் கல்லாலேயே அகமதுவை தாக்கியபோது காவல்துறையை சேர்ந்த சிலர் அங்கு இருந்து உள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இறுதியில் கும்பலின் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் அந்த கும்பல் விரைந்து வந்து, போலீசாரிடம் இருந்து அந்த நபரை விடுவித்து, இழுத்து சென்றுவிட்டது. அகமதுவின் சடலத்தை மரத்தில் இருந்து கீழே இறக்க போலீசார் முயன்றுள்ளனர். அவர்களையும் அந்த கும்பல் கற்களை வீசி தாக்கி உள்ளது.

இந்த பயங்கரமான சம்பவத்துக்கு பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார். சட்டத்தை பொதுமக்கள் கையில் எடுத்துக் கொள்வதை தன்னுடைய அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதுடன், இது குறித்து பஞ்சாப் காவல்துறை தலைவரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இதஒ தொடர்ந்து இந்த சம்பவத்தில் 102 பேர் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். இதில் 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. இலங்கையை சேர்ந்தவர் பிரியந்தா குமாரா.(40 வயது) அவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்தவர். இவர் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை கிழித்துவிட்டதாக கூறப்பட்டது. அந்த போஸ்டரில் குரானின் வாசகங்களும் அச்சிடப்பட்டிருந்ததாம்.

இதனால், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, பிரியந்தா குமாராவை சரமாரியாக தாக்கினர்.ஆத்திரம் தீராமல் அவரை தரதரவென சாலைக்கு இழுத்து வந்து கட்டையாலேயே தாக்கி உள்ளனர். இதனால் பிரியந்தா குமாரா துடிதுடித்து மயங்கி விழுந்தார்.

கண்ணெதிரே அவர் சுருண்டு விழுவதை பார்த்தும் அந்த கும்பலுக்கு ஆத்திரம் தீரவில்லை. பிரியந்தா குமாராவை நடுரோட்டிற்கு இழுத்து வந்து, தீவைத்து உயிருடன் எரித்தும் கொன்றது. இந்த் சம்பவம் உலகையே உலுக்கியது.இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பாகிஸ்தானின் அவமானகரமான நாள் என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com