

கீவ்,
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கியது. 4 ஆண்டுகளை நெருங்கியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளின் தலைவர்களிடமும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தசூழலில் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி தெற்கு சபோரிஜியா பிராந்தியத்தை குறிவைத்து ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்து எரிந்தது.
அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் உடல் கருகி 3 பேர் பலியாகினர். அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையே நடைபெறும் இந்த தாக்குதல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.