சுவிட்சர்லாந்தில் திடீர் பனிச்சரிவு; 80 பயணிகளுடன் சென்ற ரெயில் தடம் புரண்டது

சம்பவ பகுதிக்கு ஆம்புலன்சுகளும், மீட்பு ஹெலிகாப்டர்களும் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டன.

சுவிட்சர்லாந்தில் திடீர் பனிச்சரிவு; 80 பயணிகளுடன் சென்ற ரெயில் தடம் புரண்டது
Published on

ஜெனீவா,

சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கே ஸ்டாக்கிரேபென் பகுதியில் கோப்பன்ஸ்டெயின் என்ற கிராமத்தில் 80 பயணிகளுடன் ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது.

அப்போது அந்த பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால், மலை போன்ற பனிக்கட்டிகள் உடைந்து, உருண்டு சரிந்தன. அவை பயணிகள் ரெயில் மீது விழுந்து, தாக்கியதில் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.

Also Read
கொடுக்க கூடாத இடத்தில் கணவருக்கு முத்தம் கொடுத்து... மனைவிக்கு நெட்டிசன்கள் கண்டனம்

சுவிட்சர்லாந்தில் திடீர் பனிச்சரிவு; 80 பயணிகளுடன் சென்ற ரெயில் தடம் புரண்டது

இந்த விபத்தில் பலர் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுதொடர்பான தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு ஆம்புலன்சுகளும், மீட்பு ஹெலிகாப்டர்களும் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டன. இதுவரை 30 பயணிகள் மீட்கப்பட்டு உள்ளனர்.

ரெயில் தடம் புரண்ட விபத்தில் சிக்கி 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், பலத்த பாதிப்பு இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com