

ஜெனீவா,
காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த சுப்பிரமணியன், சிவசந்திரன் உள்ளிட்ட 40 வீரர்கள் பலியனார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.
இந்த தாக்குதலுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணைய தலவர் மிச்செல் பச்லெட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐநா மனித உரிமை ஆணைய தலைவரின் செய்தி தொடர்பாளர் ருபெர்ட் கோல்வில்லே ஜெனீவாவில் கூறும் போது, ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐநா மனித உரிமை ஆணையர் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார் என்றார்.