ரஷியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு

ரஷியாவில் பலானா நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.
ரஷியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு
Published on


* கொலம்பியாவின் சாபர்ரால் மாகாணத்தில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை, வெள்ளத்துக்கு இதுவரை 7பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

* ரஷியாவின் கோர்யாக் பிராந்தியத்தில் உள்ள பலானா நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எகிப்து அதிபர் அப்தல் பட்டா எல் சிசியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருதரப்பு உறவு மற்றும் லிபியா உள்நாட்டு போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

* மங்கோலியா நாட்டின் தலைநகர் உலன் பட்டோரில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 26 பேர் விஷச்சாராயம் குடித்து இறந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

* ஹாங்காங்கில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக போராட்டக்காரர்கள் 336 பேரை கைது செய்திருப்பதாக ஹாங்காங் போலீசார் தெரிவித்துள்ளனர்.

* சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களை அந்த நாட்டு அரசுடன் இணைந்து ரஷியாவும், ஈரானும் கொன்று குவித்து வருகிறது என்றும் இந்த படுகொலையை தடுக்க துருக்கி கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com