சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம்- இன்று சூரிய பிரபை வாகன சேவை

சூரிய பிரபை வாகனத்தில் தாயாரை தரிசனம் செய்வது ஆரோக்கியம், செல்வம், செழிப்பு, ஞானம் ஆகிய பலன்களை அளிக்கும் என்பது நம்பிக்கை.
சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம்- இன்று சூரிய பிரபை வாகன சேவை
Published on

சென்னை:

சென்னை தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. தினமும் உற்சவ தாயார், வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அவ்வகையில், இன்று சூரிய பிரபை வாகனத்தில் தன்வந்திரி பகவான் அலங்காரத்தில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சூரிய பிரபை வாகனத்தில் தாயாரை தரிசனம் செய்வது, அமைதியான வாழ்க்கைக்கு அவசியமான ஆரோக்கியம், செல்வம், செழிப்பு, ஞானம் ஆகிய பலன்களை அளிக்கும் என பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com