கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்?

திருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.
கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்?
Published on

பெண்களை பொறுத்தவரை சில காரணங்கள் தனியாக உள்ளது. அதாவது பெண்ணின் லக்னாதிபதியும், லக்னாதிபதி நின்ற ஸ்தானாதிபதியும் ஒருவருக்கு ஒருவர் சஷ்டாங்கமானால் (6-8) திருமணம் தடைபடும். சந்திரனும் சனியும் சேர்ந்தோ அல்லது சம சப்தமாகவோ இருந்தால் திருமணம் தட்டிச் சென்று கொண்டே இருக்கும். சந்திரனும் சுக்ரனும் சேர்ந்து கடக ராசியிலோ அல்லது சுக்ரனின் வீடான ரிஷபம் அல்லது துலாம் ராசியிலோ அமைந்திருப்பது, கன்னி ராசியில் இருக்கும் சூரியனை சனி பார்வை செய்வது போன்றவையும், திருமணம் நடப்பதற்கு பிரச்சினையாக உள்ள அமைப்புகளே ஆகும்.

7-க்குரிய கிரகம், 6-ம் வீட்டில் நீச்சம் அடைந்தால் திருணம் தடைபடும். 7-ம் வீட்டில் உள்ள சனியை, சுப கிரகங்கள் எதுவும் பார்க்காமல், பாபிகள் பார்க்க திருமணம் நடைபெறுவது சிரமமே. குருவும், சுக்ரனும் 6-ம் வீடான ரோக ஸ்தானத்தில் இருந்தால் கணவன் நோயுள்ளவனாக இருப்பார். பெண்ணின் ராசியை சனி, செவ்வாய் இருவரும் பார்க்க நேரிட்டால், எளிதில் திருமணம் நடக்காது. முதிர்கன்னியாக பெற்றோருக்கு பாரமாக வீட்டில் இருப்பார்.

பெண்ணின் ராசி, நவாம்சம் ஆகிய இரண்டு இடங்களிலும் சனி 7-ம் வீட்டில் இருந்தால், அந்தப் பெண்ணுக்கு வயதான கணவனே அமைவார். அல்லது இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும். ஜாதகத்தில் சுக்ரன் இருக்கும் இடத்தில் இருந்து 7-ம் வீட்டில் சனி இருந்தால் தாமதமாக திருமணம் நடைபெறும். 7-ம் பாவாதிபதி 12-ல், 12-ம் வீட்டுக்கு அதிபதி 7-ல் அமைந்தாலும் திருமணம் தாமதமாகும்.

இனி கைரேகைப்படி பெண்களுக்கு திருமணத் தடை ஏற்படுவது எதனால் என்று பார்க்கலாம். பெண்ணின் இடது கையில் அமைந்துள்ள இருதய ரேகையும், புத்தி ரேகையும் மிக அருகில் நெருங்கி இருப்பது. கங்கண ரேகைகள் ஒன்றுடன் மற்றொன்று தொடாமல் இருப்பது போன்றது நல்லது. மாறாக தொட்டுக் கொண்டிருந்தால் திருமண தடை உண்டாகும். திருமண ரேகை புதன் மேட்டின் அடியில், இருதய ரேகைக்கு மேல் தான் குறுக்காக அமைந்திருக்கும். திருமண ரேகை, இருதய ரேகைக்கு கீழ் குறுக்காக அமைந்த பெண்ணுக்கு திருமண யோகம் இல்லை. திருமண ரேகை சுத்தமாக அமைவது நல்லது. திருமண ரேகையில் தீவுக்குறி இருக்கக்கூடாது. அது தம்பதியர்களின் பிரிவை சொல்வதாகும்.

கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com