வியப்பூட்டும் சிற்பம்

ஆந்திரா மாநிலம் லேபட்சி என்ற இடத்தில் உள்ள விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு ஆலயத்தில் காணப்படும் அற்புதமான கலைநயம் மிக்க சிற்பம் இது.
வியப்பூட்டும் சிற்பம்
Published on

இந்தச் சிற்பம், தன்னுடைய கன்றுக்கு, பால் ஊட்டும் தாய் பசுவின் மூன்று விதமான அசைவுகளை ஒரே நேரத்தில் காணும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது அந்த சிற்பியின் படைப்பாற்றல் கற்பனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த சிற்பத்தில் பசுவிற்கு மூன்று தலை இருப்பது போல் வடிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த இரண்டு தலைகளை மறைத்துவிட்டுப் பார்த்தாலும், அது பசுவின் உடலோடு கச்சிதமாக பொருந்தியிருப்பதை காணமுடியும். தன் கன்று பால் குடிக்கும் போது, அந்த கன்றை தலையை தாழ்த்தி நாவால் வருடும் பசு, தன் தலையை அப்படியே உயர்த்தி நேராக பார்ப்பது போன்று மூன்று கோலங்களில் இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருப்பது பார்ப்பவர்களை ரசிக்கவும், வியக்கவும் வைப்பதாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com