

இந்தச் சிலை உள்ள வைத்தியநாதீஸ்வரர் கோவில், சோழர்கள், கொய்சாலர்கள், விஜயநகரப் பேரரசு, மைசூர் மன்னர்கள் என பல மன்னர்களின் திருப்பணிகளை சந்தித்திருக்கிறது. அந்த வகையில் இந்த துவாரபாலகர் சிலையானது, விஜயநகர பேரரசின் கட்டுமானப் பணியில் ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. தனது கரங்களில் திரிசூலம், பாம்பு சுற்றிய டமருகம், கதாயுதம், அபய முத்திரையுடன் காணப்படும் இந்த துவாரபாலகரின் வயிற்றுப் பகுதியை நன்றாக கவனித்தால், மார்பும், வயிறும் சேர்ந்த பகுதியானது, ஒரு காளையின் தோற்றத்தில் இருப்பதை உணரமுடியும்.