

ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள், ஆரம்ப கட்டுமான வேலைகள் நடைபெற்ற 10-ம் நூற்றாண்டை குறிப்பிடுகின்றன. என்றாலும் தற்போது இங்குள்ள பெரும்பாலான சிற்பங்கள் 15, 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் உருவானவை.
அதில் ஒன்றுதான், பெண்களின் உருவத்தை வைத்து செதுக்கப்பட்ட இந்த யானை சிற்பம். அசாதாரணமான வேலைப்பாடு கொண்ட இது, 9 பெண்கள் உருவத்தைக் கொண்டு முழுமையான யானை உருவமாக செதுக்கப்பட்டுள்ளது. இதற்கு நவநாரி குஞ்சரம் என்று பெயர். 9 பெண் உருவத்தால் உருவான யானையின் மீது ஒருவர் அமர்ந்து வில் போர் புரிவது போல் இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.