விவசாயத்தை மட்டுமல்ல..மனிதர்களையும் பாதிக்கும் ஆப்பிரிக்க நத்தை..!

wiki
இந்திய மண்ணுக்கு தொடர்பே இல்லாத சில உயிரினங்கள் வேறு நாடுகளில் இருந்து இந்த மண்ணில் பரவுவதன் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தற்போது இந்தியாவின் சில மாநிலங்களில் காணப்படும் ஆப்பிரிக்க ராட்சத நத்தை 1847-ம் ஆண்டு ஆங்கிலேயே ஆராய்ச்சியாளர் வில்லியம் ஹென்றி என்பவர் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நத்தைகள் எத்தியோப்பியா, கென்யா, தான்சானியா போன்ற கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் உயிரினங்கள் ஆகும்.
இவை ஈரப்பதம் நிறைந்த சூழலில் விரைவாக வளர்ந்து பெருகும் தன்மை கொண்டவை.
இந்திய மண்ணுக்கு முற்றிலும் பொருத்தமற்ற உயிரினம் என்றும், இந்த மண்ணில் விளையும் பயிர்களை வேகமாக அழிக்கும் தன்மை கொண்டவை என்றும் தெரியவந்துள்ளது.
பெரும்பாலும் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் பரவி உள்ளன. இந்த நத்தைகளின் கழிவுகள் மண்ணில் அமிலத்தன்மையை அதிக அளவில் உருவாக்குகிறது.
இதனால் பூமியின் ஊட்டச்சத்து சுழற்சியில், பயிர்கள் விளையாத சூழ்நிலை உருவாகும் என்றும், மாற்றங்களை ஏற்படுத்தி இயற்கை சூழலில் பயிர்களை விளைவிக்க முடியாத அளவுக்கு பாதிப்புகளை உருவாக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வகை நத்தைகள், மனிதர்களுக்கு மூளை அழற்சி போன்ற ஆபத்தான நோய்களை பரப்ப வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்து உள்ளனர்.
Explore