இந்த காலத்திலும் ரெயில் சேவை இல்லாத நாடுகளா..?வாங்க பார்க்கலாம்.
பூட்டான்: இந்தியாவின் அண்டை நாடாக அறியப்படும் பூட்டானில் ரெயில் சேவை இல்லை. ஆனால் விரைவில் இந்திய ரெயில்வேயுடன் இணைந்து அந்நாட்டில் ரெயில் சேவையை தொடங்க பூட்டான் திட்டமிட்டுள்ளது.
சைப்ரஸ்: இந்த நாட்டில் 1905-ம் ஆண்டு முதல் 1951-ம் ஆண்டு வரை ரெயில் சேவை இருந்தது. ஆனால் அந்நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு திமோர்: இன்று வரை இங்கு ரெயில் வசதிகள் உருவாக்கப்படவில்லை. இங்கு வசிப்பவர்கள் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலமே தங்கள் பயணத்தை தொடர்கின்றனர்.
லிபியா: வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்த நாட்டில் ரெயில் சேவை இருந்தது. உள்நாட்டு போரின் காரணமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அங்கு 1965-ம் ஆண்டு முதல் ரெயில் இயங்கவில்லை.
குவைத்: பல எண்ணெய் வளங்களை கொண்டுள்ள குவைத்தில் ரெயில் சேவை இல்லாதது ஆச்சரியமானதுதான். தற்போது அங்கு சில ரெயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
அன்டோரா: மக்கள் தொகை அடிப்படையில் அன்டோரா உலகின் 11-வது சிறிய நாடாகும். இங்கு மக்கள் தொகை குறைவாக இருப்பதால், ரெயில் பாதை அமைக்கப்படவில்லை.
மாலத்தீவு: இங்கு குறைந்த மக்கள் தொகை பிரிந்துகிடக்கும் நிலப்பரப்பு கொண்ட நாடு என்பதால் ரெயில் சேவை அமைக்கப்படவில்லை.