இண்டர்வியூ போறிங்களா..?இதை பின்பற்றுங்கள் வெற்றி நிச்சயம்..!
முதலில், நீங்கள் வேலைக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவர் என்று இண்டர்வியூ செய்பவர் தீர்மானிக்கும் விதத்தில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடக்க உள்ள இடம், நேரம் பற்றி உறுதியாகத் தெரிந்து வைப்பதுடன், எப்படி சரியான நேரத்துக்குள் அங்கு போய்ச் சேர வேண்டும் என்பதையும் முன்னதாகத் தீர்மானம் செய்து வைத்துக் கொள்ளவும்.
நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்களை முன்கூட்டியே தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நீங்கள் இருக்கையில் உட்காரும் விதத்திலிருந்து உங்களுடைய விவரங்களை அவர்கள் அறியக்கூடும். அதனால், உங்களுக்கு அளிக்கப்பட்ட இருக்கையில் நேராக நிமிர்ந்து அமரவும்.
நீங்கள்தான் தகுதியானவர் என்று நினைக்கும் வகையில் பதில் அளிக்கவும். உங்கள் கவுரவமான உடை அமைப்பும், ஒழுங்குமுறையும் உங்களைப் பற்றி சாதகமாக அவர்களுக்குத் தெரிவிக்கும்.
மூக்கைத் தொடுதல், கன்னத்தைத் தேய்த்தல், வேறு எங்கோ நோக்குதல் போன்றவை உங்களிடம் ஒருவித சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும்.
உங்கள் முழங்கால் இண்டர்வியூ செய்பவரை நோக்கி இருக்கட்டும். அது, நீங்கள் அவர்கள் மீது கவனமாக இருப்பதைக் காட்டும்.
கேட்கப்படும் கேள்விகளுக்கு பொய் பேசாதீர்கள்
நீங்கள் தேர்வானாலும் ஆகாவிட்டாலும் இறுதியில் கிளம்பும் போது அவருடன் கைக்குலுக்கிவிட்டு வாருங்கள்